ஞாநி

ஞாநியின் ஓ பக்கங்களுக்கு நான் எழுதிய பதிலை அவர் பிரசுரிக்காததால், அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.

இரண்டு கழிவுகள் (2012-09-01)

சூரிய கதிர் பதில்கள் (2012-09-01)

மேற்கண்ட அவருடைய இரண்டு கட்டுரைகளுக்கும் நான் எழுதிய பதில் கீழே:

-- start --

ஞாநியின் போன பதிவையும் (சூரிய கதிர் பதில்கள்) இந்த பதிவையும் கவனியுங்கள். காங்கிரஸுக்கு ஜால்ரா போடத் தயாராகிவிட்டார் என்பது புரிகிறது. உட்கட்சி ஜனநாயகம் கொண்ட கட்சி காங்கிரஸாம்! மிகப் பெரிய நகைச்சுவை. நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என்ற வரிசைப்பாட்டை மறந்து விட்டாரா?

குஜராத்தின் பொருளாதார முன்னேற்றத்தைப் பார்த்து உலகமே வியக்கிறது. மோடியைப் பாராட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டு விட்டார்கள். மோடி ஆட்சியில் உள்ள குற்றங்களைக் கண்டுபிடித்து மக்களுக்குச் சொல்வதுதான் சரியான வழி என்ற பதிலில் (போன பதிவு) இவரின் வயிற்றெரிச்சல் புகைகிறது.

உள்ளூர் பத்திரிக்கையிலிருந்து Washington Post Editorial வரை காங்கிரஸின் மானம் கப்பலேறுகிறது. அதைப் பற்றி பேச்சு மூச்சையே காணோம். என்னவோ நிலக்கரி ஊழலே நடக்காதது போன்ற வழவழ கொழகொழ பதிலை கவனியுங்கள். மேலும் மசோதாவை நிறைவேற்றுவதற்காக பா.ஜ.க போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற குள்ள நரித்தனமான வாக்கியத்தையும் கவனியுங்கள்.

இவர் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளராம்! இவரே இந்த லஷணம் என்றால், இன்னும் நேர்மையல்லாத பத்திரிக்கையாளர்கள் என்னவெல்லாம் சொல்லப் போகிறார்களோ.

-- end --

No comments:

Post a Comment